வவுனியாவில் இருவர் கொடூரமாக கொலை! ஒருவர் படுகாயம்

Report Print Theesan in சமூகம்

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாணிக்கர் வளவுப்பகுதியில் வீடொன்றில் இருந்து இரண்டு பேரின் சடலங்களை பாரிய வெட்டுக்காயங்களுடன் பொலிஸார் மீட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு சடலங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ள நிலையில்,சம்பவ இடத்திற்கு சென்ற ஓமந்தை பொலிஸார் இன்று அதிகாலை பாரிய வெட்டுக்காயங்களுடன் காணப்பட்ட இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமடைந்திருந்த நிலையில் அம்புலன்ஸ் மூலம் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் மாணிக்கர் வளவு கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தலைவரான கோபால் குகதாசன் 40 எனும் 4 பிள்ளைகளின் தந்தை மற்றும் கரிப்பட்ட முறிப்பை சேர்ந்த சிவனு மகேந்திரன் வயது 34 ஆகிய இருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதன்போது சுப்பிரமணியம் சிவாகரன் என்ற நபர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் மாணிக்கர் வளவில் வசித்து வரும் இளைஞர் ஒருவர் ஓமந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.