பிரபல வானொலி அறிவிப்பாளர் விபத்தில் பலி

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையின் பிரபல வானொலி சேவையின் அறிவிப்பாளர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பிரபாஷ்வர வித்தானகே என்ற ஊடகவியலாளர் நேற்று அதிகாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நுகேகொட, தெல்கந்த பிரதேசத்தில் வீதிக்கு அருகில் வேகமாக பயணித்த காரின் கீழ் பகுதி மதில் ஒன்றில் மோதுண்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அறிவிப்பாளர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வாகனத்தை ஓட்டிய சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You may like this video