கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்களில் இறப்போரின் வீதம் குறைவு: சுகாதார அமைச்சர்

Report Print Steephen Steephen in சமூகம்
63Shares

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களில் இறப்பவர்களின் வீதம் மிகவும் குறைவு என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த வைரஸ் முதியவர்களுக்கு தொற்றினால், அவர்கள் இறக்கும் வாய்ப்பு அதிகம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், முதியவர்கள் இந்த நோய் தொற்றுவதை தடுக்க முடிந்தளவு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டு மக்கள் அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் இன்று காலை ஒளிப்பரப்பான கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும், கொரோனா நோயாளிகளுக்காக தற்போது மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகள் போதுமானது.

தேவை ஏற்பட்டால், வசதிகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.