ஜிந்துப்பிட்டி கொரோனா தொற்றாளருடன் பழகியவர்களுக்கு இன்று PCR பரிசோதனை

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு - ஜிந்துப்பிட்டி பிரதேசத்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளருடன் நெருக்கமாக பழகியவர்கள் எனக் கூறப்படும் நபர்களுக்கு இன்று PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரியவருகிறது.

இதன்படி 100 பேருக்கு இன்று PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக கொழும்பு மாநகரசபையின் தொற்று நோய் விஞ்ஞான மருத்துவர் தினுகா குருகே தெரிவித்துள்ளார்.

இந்த வாரம் முழுவதும் ஆங்காங்கே மாதிரிகளை பெற்று PCR பரிசோதனை நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.