கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவி வருவதை ஏற்றுக்கொள்ளுங்கள்: குணதாச அமரசேகர

Report Print Steephen Steephen in சமூகம்
51Shares

கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவி வருவதை ஏற்றுக்கொள்ளுமாறும், இரண்டாவது அலை ஏற்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துமாறும் சிங்கள தேசிய அமைப்புகள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி குணதாச அமரசேகர, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை பரவல் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி, எந்த தரப்பாவது வேண்டும் என்றே சீர்குலைப்பது அல்லது அரசாங்கத்திற்கு எதிரான சதித்திட்ட செயலில் ஈடுபட்டிருந்தால், அவர்கள் குறித்து வெளிப்படுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் அவர், ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை ஆரம்பமானதுடன் சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் ஏனைய தரப்பினர் மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இது கொரோனா வைரஸ் பரவலின் முதலாவது அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தி, ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் மக்களிடம் பெற்றுக்கொண்ட வரவேற்பு மற்றும் கௌரவத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் குணதாச அமரசேகர குறிப்பிட்டுள்ளார்.