பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

Report Print Ajith Ajith in சமூகம்
66Shares

சுமார் 100 மில்லியன் ரூபா பெறுமதியான 10 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரால் இது கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பு கொட்டிகாவத்த பகுதியில் இருந்தே இந்த ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட நிலையில் தடுப்பில் வைக்கப்பட்டுள்ள மாக்கந்துரே மதூஸ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இந்தப் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் மாக்கந்துரே மதூஸ், குற்றப்புலனாய்வுத்துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வந்தார்.

அண்மையிலேயே அவர் தொடர்பான விசாரணை கொழும்பு குற்றத்தடுப்பு காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.