வவுனியா தனிமைப்படுத்தல் மையத்திற்கு அழைத்துவரப்பட்ட கொவிட்-19 சந்தேகநபர்கள்

Report Print Theesan in சமூகம்
40Shares

வவுனியா - பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொவிட்-19 சந்தேகநபர்கள் 91 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பூந்தோட்டத்தில் அமைந்துள்ள தேசிய கல்வியற் கல்லூரி கொவிட்-19 தனிமைப்படுத்தல் நிலையமாக அண்மையில் மாற்றப்பட்டிருந்தது.

இந்நிலையில் கம்பஹா மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் என 91 பேர் குறித்த மையத்திற்கு நேற்றிரவு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

அவர்கள் இராணுவ பாதுகாப்புடன் 3 பேருந்துகளில் அழைத்து வரப்பட்டிருந்ததுடன், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.