மண்மேடு இடிந்து விழுந்ததில் இளைஞரொருவர் உயிரிழப்பு

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு கித்துள் ஆற்றுப் பகுதியில் நேற்று மாலை மணல் அகழ்வில் ஈடுபட்ட இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் மண் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மண் மேடு இடிந்து விழுந்ததில் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் இலுப்பட்டிச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ராஜசுந்தரம் சஜிந்தன் 20 வயது என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.

அனர்த்தத்தில் சிக்கிய இளைஞர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக கரடியனாறு மாவட்ட வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.