ஊடகவியலாளர் ஃபிரட்ரிகா ஜான்ஸ் இலங்கையை விட்டு வெளியேறிய நிலையில் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளார் என தெரியவருகிறது.
தமது பேஸ்புக் பதிவில் ஜான்ஸ், “தாமும் தமது குடும்பத்தினரும் இந்த வாரம் அமெரிக்காவின் குடியுரிமையை பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.
தாம் பிறந்த நாட்டால் வெளியே தள்ளப்பட்டு, விலகி, துன்புறுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், தாம் நேசித்த மற்றும் ஒருபோதும் வெளியேற விரும்பாத நாடு என்று இலங்கையை குறிப்பிட்டுள்ளார்.
எனினும் அமெரிக்கா தம்மையும் தமது பிள்ளைகளையும் அரவணைத்துக்கொண்டது. அந்தநாட்டில், தாம் அமைதியையும் மகிழ்ச்சியையும் காண்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லாவற்றிற்கும் மேலாக, மனித இயல்பு மீதான நம்பிக்கை மீட்டெடுக்கப்பட்டது. எனவே நன்றி அமெரிக்கா” என்று அவர் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.