கொழும்பு துறைமுகத்தில் விடுவிக்கப்படாதிருக்கும் 7 PCR இயந்திரங்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

தினமும் நடத்தும் PCR பரிசோதனைகளை 7 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்க மேலும் அந்த இயந்திரங்களை கொள்வனவு செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போது இந்த பரிசோதனை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள 20 இடங்களில் தினமும் 10 ஆயிரம் பரிசோதனைகள் நடத்த முடியும் எனவும் அமைச்சு கூறியுள்ளது.

இதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் கொழும்பு துறைமுகத்திற்கு வந்துள்ள 7 PCR இயந்திரங்களை இதுவரை விடுவித்துக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இவற்றை விடுவித்துக்கொள்ள உடனடியாக நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.

தற்போது தினமும் 10 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்பட முடியும் என்ற போதிலும் 3 ஆயிரத்து 894 பரிசோதனைகளே நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் கொழும்பு கிழக்கு மருத்துமனையில் தினமும் ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.