ஆரம்பித்த இடமின்றி ஆங்காங்கே நாடு முழுவதும் கொரோனா தொற்றாளர்கள் - அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Report Print Steephen Steephen in சமூகம்

நாட்டில் தற்போது ஆங்காங்கே கொரோனா தொற்றாளர்கள் கொத்தணியாக அடையாளம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில நோயாளிகளுக்கு கொரோனா வைரஸ் எங்கு தொற்றியது என்பதை கண்டுபிடிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த சங்கத்தின் உதவிச் செயலாளர் மருத்துவர் நவீன் டி சொய்சா கூறியுள்ளார்.

இதன் காரணமாக கொரோனா நோய் சமூகத்தில் பரவியுள்ளது என்ற அறிக்கை வெளியிட நேரிடும் எனவும் இறுதி ஆபத்தான கட்டத்திற்கு இலங்கை சென்றுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நோயாளிகளிடம் நோய் அறிகுறிகள் குறைந்து காணப்படுவது சாதகமான நிலைமை. கொரோனா தொற்றாளர்களின் தொற்று மூலத்தை கண்டுபிடிப்பதை விட தினமும் அதிகரித்து வரும் தொற்றாளர்கள் குறித்து தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் நவீன் டி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.