மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார் கருணாகரன்

Report Print Rusath in சமூகம்

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவை விசேடதர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டதையடுத்தே இன்று சமய வழிபாட்டின் பின் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலுள்ள மதஸ்தலங்களுக்குச் சென்று ஆசிர்வாதத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் அவர் கருத்து தெரிவிக்கையில், சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது.

இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புகளை பெரிதும் எதிர்பார்கின்றேன்.

இம்மாவட்டத்திலுள்ள அனைத்து இனமக்களுக்கும் இன, மத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களைவிட குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கடமைப் பொறுப்பேற்கும் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ.நவேஸ்வரன், பிரதம கணக்காளர் க.ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்களென பலரும் பிரசன்னமாயிருந்தனர்.