ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான மைத்திரிபால சிறிசேன

Report Print Ajith Ajith in சமூகம்
34Shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் முன் இன்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியமளித்துள்ளார்.

இன்று அவரிடம் சுமார் 3 மணித்தியாலங்களாக சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மீண்டும் ஐந்தாவது தடவையாக ஒக்டோபர் 22ஆம் திகதியன்று ஆணைக்குழுவின் முன் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று அவர் ஆணைக்குழுவில் முற்பகல் 10 மணியளவில் முன்னிலையானார்.

இதற்கு முன்னர் அவர் ஆணைக்குழுவுக்கு முன்னால் சாட்சியம் வழங்கியபோது வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் நடவடிக்கை காரணமாக தீவிரவாத குழுக்களின் நடவடிக்கைகளை தமது அரசாங்கத்தால் அடக்க முடியவில்லை என்று கூறியிருந்தார்.

ஒரு நாட்டில் நிகழும் விபத்துக்களை அடக்குவது பாதுகாப்புப் படையினரின் பொறுப்பு என்றும் அவர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.