மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் ஆரம்பத்தை கண்டறிய புலனாய்வு விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கொரோனா கொத்தணி உருவாகியது எப்படி என்பதை கண்டறிய அரச புலனாய்வு சேவையின் அதிகாரிகளை பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுகாதார பிரிவினரின் ஆலோசனைக்கு அமைய இந்த விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு பொலிஸ் அதிகாரிகளின் உதவியும் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற கொரோனா பரவல் சம்பந்தமான செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.