வவுனியாவில் மீனவ குடும்பங்களுக்கு குடிநீர் வசதி

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் வாவியுடனான கிராமம் எனும் அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் மீனவ குடும்பங்களுக்கான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

வவுனியா மாமடுவ மீனவக்கிராமத்தில் குறித்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன் கடற்தொழில் அமைச்சினுடைய, 36 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய் நிதியில் இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் 68 மீனவ குடும்பங்களின் சுத்தமான குடிநீர்த்தேவை பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா மாவட்ட நீர் உயிரின செய்கை விரிவாக்கல் நிலையத்தின் அதிகாரி யோ.நிசாந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் தவமலர் மனோகரராஜா மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் கடந்த சில வருடங்களாக சிறுநீரக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து செல்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.