கொரோனா வைரஸ் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் எதிர்வரும் நாட்களில் நாட்டை மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா தொற்றாளர்களை அடையாளம் கண்டு பிரதேசத்தை மூடுவதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்துவது தொடர்பில் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் சமூகத்திற்குள் இன்னமும் கொரோனா வைரஸ் பரவி செல்லவில்லை என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கமவே தெரிவித்துள்ளார்.
You may like this video