குவைத்தில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் மற்றும் 160 பணிப்பெண்களுக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்
83Shares

குவைத் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தில் அமைந்துள்ள சுரக்ஷா இல்லத்திற்கு இலங்கை பணிப்பெண்களை பொறுப்பேற்பதை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தூதரக அதிகாரிகள் சிலர் மற்றும் சுரக்ஷா இல்லத்தில் நீண்டகாலமாக தங்கி இருக்கும் 160 வீட்டுப் பணிப்பெண்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக குவைத்துக்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தற்போதைய சந்தர்ப்பத்தில் சுரக்ஷா இல்லத்தில் இடவசதிகள் போதுமானதாக இல்லை என்பதால், அங்கு வரும் வீட்டுப் பணிப்பெண்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்குவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது

ஆனையினால், இனிவரும் காலங்களில் பெண்களை சுரக்ஷா இல்லத்திற்கு பொறுப்பேற்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொழில் புரியும் இடங்களில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், தூதரகத்திற்கு வருவதை தவிர்க்குமாறும் தூதரகம் அல்லது வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தை தொடர்புகொண்டு பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளுமாறு இலங்கை தூதரகம், குவைத் நாட்டில் தொழில் புரியும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்களுக்கு அறிவித்துள்ளது.

இதனிடையே கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டுள்ள குவைத் நாட்டுக்கான இலங்கை தூதரகம் அவசர பொது சேவைகளை வழங்குவதற்காக மாத்திரம் நாளை முதல் திறக்கப்படும் எனவும் தூதரகம் அறிவித்துள்ளது.