அனைத்து விலங்கினக் காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை மூடல்!

Report Print Ajith Ajith in சமூகம்
58Shares

கொரோனா பரவலை அடுத்து நாட்டின் அனைத்து விலங்கினக் காட்சியகங்களும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத்துறை இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க இதனை அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் வனவிலங்கு பாதுகாப்புத்துறை பணிப்பாளருக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நடைமுறை இன்றிலிருந்து அமுலுக்கு வந்துள்ளது.

இதேவேளை தேசியப் பூங்காக்களுக்கு செல்வோரை நுழைவாயிலில் வரையறுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.