தலவாக்கலை நகரிலுள்ள விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல்

Report Print Thirumal Thirumal in சமூகம்

தலவாக்கலை நகரில் இலங்கை வங்கிக்கு அருகில் உள்ள சில்லறை கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தீ விபத்து இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

தலவாக்கலை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் ஒரு மணித்தியாலயங்களுக்கு பின்பு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த கடையில் யாரும் இல்லாதபோதே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயினால் ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை எனவும், தீ ஏற்பட்டமைக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் தலவாக்கலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.