கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருபவர்களுக்கு கடுமையாகும் நடைமுறை

Report Print Vethu Vethu in சமூகம்

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளுக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் PCR பரிசோதனை மேற்கொண்டதன் பின்னரே கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நுழைய முடியும்.

72 மணித்தியாலத்திற்குள் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருப்பது இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 6 மணி முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திற்கு அல்லது விமான நிலைய பகுதிக்குள் வருபவர்கள் PCR பரிசோதனை அறிக்கையுடனே அனுமதிக்கப்படுவார்கள் என விமான நிலைய நிறுவனத்தின் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமை மற்றும் உலக நாடுகளின் நிலைமைகளை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு PCR பரிசோதனை முடிவுகளின்றி வருபவர்கள் விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்தை முழுமையாக திறப்பதற்கு மேலும் சில காலங்களாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.