தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மூன்று பெண்கள் நீர்கொழும்பில் கைது

Report Print Ajith Ajith in சமூகம்

தனிமைப்படுத்தல் சட்டத்தையும் மீறி ஆயர்வேத சுக நிலையம் ஒன்றை நடத்திச் சென்றதாக கூறப்படும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பு, பெரியமுல்லை பகுதியில் வைத்து இவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 24,45க்கும் இடைப்பட்ட அகவையைக் கொண்டவர்களாவர். இவர்கள் கட்டான, தங்கொட்டுவ மற்றும் மாத்தறை பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

குறித்த நிலையம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டது மாத்திரமல்லாமல், உரிய அனுமதிப்பத்திரத்தையும் கொண்டிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.