கம்பஹாவில் வருமானத்தை இழந்த குடும்பங்களுக்கு 5000 ரூபா நிதி உதவி..

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா தொற்றை அடுத்து ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள கம்பஹா மாவடத்தில் வருமானத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா மானிய பண உதவியை வழங்கும் திட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் இந்த பண உதவி வழங்கப்படும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்

இதற்காக அரசாங்கம் ஏற்கனவே 400 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பரவல் ஏற்பட்டதை தொடர்ந்தும் நாடு முழுவதும் 5000 ரூபா பண உதவித்திட்டம் அமுல் செய்யப்பட்டது.

எனினும் அதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.