கம்பஹா பூகொட காவல்துறையின் பொறுப்பதிகாரி இடைநிறுத்தம்...

Report Print Ajith Ajith in சமூகம்

கம்பஹா - பூகொட காவல்துறையின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

குறித்த காவல்துறையில் காவலில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் காலமானார்.

கொள்ளை தொடர்பாக கைது செய்யப்பட்ட 21 அகவை கொண்ட ஆண் ஒருவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினரால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் காவல்துறையின் பொறுப்பதிகாரியும் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.