கொரோனா தொற்றாளிகள் அடுத்த வாரமும் அடையாளம் காணப்படலாம்? சவேந்திர சில்வா

Report Print Ajith Ajith in சமூகம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா நோயாளிகள் பதிவாகியுள்ளதால், எதிர்வரும் வாரமும் முக்கியமானது என்று இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த கொரோன நோயாளிகள் 16 மாவட்டங்களில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் தொற்றாளிகளுக்கு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த நிலையில் இதுவரை கண்டறியப்படாத கொரோனா தொற்றாளிகள் அடுத்த வாரம் அடையாளம் காணப்படலாம்" என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கொழும்பு துறைமுகத்தின் ஐந்து ஊழியர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.