நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்து! ஐவர் படுகாயம்

Report Print Mubarak in சமூகம்

அம்பாறை - நிந்தவூர் பகுதியில் மூன்று மோட்டார்சைக்கிள்கள் மோதி இடம்பெற்ற விபத்தில் ஐவர் படுகாயமடைந்துள்ளர்.

நேற்றிரவு இரண்டு மோட்டார்சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதனை பின்தொடர்ந்து வந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியுள்ளன.

இவ் விபத்தில் பெண் ஒருவர் உட்பட ஐவர் படுகாயமடைந்த நிலையில் சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த பொலிஸார் அதிக வேகம் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.