கடத்துவதற்கு தயார் நிலையில் இருந்த கடலட்டைகள் மீட்பு

Report Print Ashik in சமூகம்

மன்னார் - புதுக்குடியிருப்பு நூறு வீட்டுத்திட்டம் பகுதியில் இருந்து கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் 335 கிலோகிராம் எடை கொண்ட உலர்ந்த கடலட்டைகள் இன்று மதியம் 12 மணியளவில் மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பண்டுல்ல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்ட குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி குமார பல்லேவல மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் சாமர ராஜபக்ஸ தலைமையிலான மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினரின் தலைமையிலான குழுவினரே மேற்படி புதுக்குடியிருப்பு பகுதியில் புகையிரத கடவைக்கு அருகில் கடத்தி செல்வதற்கு தாயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கடலட்டை மூட்டைகளை கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கடலட்டைக்கள் சுமார் 11 இலட்சத்து 75,000 ரூபாய் பெறுமதியானவை என தெரிய வந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.