மட்டக்களப்பில் அனுமதியின்றி மண் ஏற்றிய கும்பல் கைது

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு - வாழைச்சேனையில் இருந்து தென்பகுதிக்கு மணல் ஏற்றிச் சென்ற இரண்டு கனரக வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்களையும் வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

பாரிய கொள்கலன்களில் மணல் ஏற்றிச் செல்லும் போது விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் சிக்கியுள்ளனர்.

இந்த வாகனங்களில் மூன்று கியூப் மணல் மாத்திரமே ஏற்றுவதற்கு அனுமதி பெறப்பட்டிருந்த போதிலும் ஆறு கியூப் மணல் ஏற்றிச் செல்லப்பட்டதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.