கிளிநொச்சியில் சட்டவிரோதமாக கடத்துவதற்கு முயற்சிக்கப்பட்ட மரக்குற்றிகளை கைப்பற்றிய பொலிஸார்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட தர்மக்கேணி பகுதியில் சட்டவிரோதமாக கடத்துவதற்கு முற்பட்ட வேம்பு மற்றும் நாவல் மரக்குற்றிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

பளை பொலிஸாருக்கு இன்றையதினம் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த இடத்திற்கு சென்ற பொலிஸார் அங்கு மரக்குற்றிகள் அறுக்கப்பட்டு ஓர் இடத்தில் குவிக்கப்பட்டிருந்தை அவதானித்து, குறித்த மரக்குற்றிகளை ஏற்றிய உழவு இயந்திரத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது மரக்குற்றிகளை உழவு இயந்திரத்தில் ஏற்றிக் கொண்டு இருந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.