20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு! மருதபாண்டி ராமேஷ்வரன்

Report Print Thirumal Thirumal in சமூகம்

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு வழங்கும் என்று அக்கட்சியின் நிதிச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

கொத்மலை பிரதேசசபைக்குட்பட்ட பூண்டுலோயா ஹெரோ தோட்ட கீழ்ப்பிரிவு பாதையை காபட் பாதையாக மாற்றியமைப்பதற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

19ஆவது திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என கோரியே நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள், அதனை நிறைவேற்றுவதற்காகவே 20ஆவது திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படுகின்றது.

அதற்கு நாம் ஆதரவு வழங்குவோம். நாடாளுமன்றத்தில் அடுத்தவாரம் 20 நிறைவேறும். அதற்கான பெரும்பான்மை பலமும் ஆளுங்கட்சி வசம் இருக்கின்றது.

எதிரணி உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அவர்களும் ஆதரவு வழங்குவார்கள் என நம்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், ரிஷாட் பதியுதீன் விரைவில் கைது செய்யப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும் என கூறியுள்ளார்.