மத்துகம பிரதேச செயலக பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்கள்! வெளியான அறிவிப்பு

Report Print Sujitha Sri in சமூகம்

மத்துகம பிரதேச செயலக பிரிவில் ஓவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம நவ ஜனபதய (பதுகம புதிய குடியிருப்பு கிராமம்) ஆகிய கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்களாக பெயரிடப்பட்டிருப்பதாக கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இந்த விடயம் அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயம் நாலக கலுவெவவால் இன்று மாலை 6.20 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.