வவுனியாவில் இரகசிய தகவலுக்கு அமைய வீடொன்று முற்றுகை! ஒருவர் கைது

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, முருகனூர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 6 அடி நீளமான நான்கு கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ள நிலையில் இது தொடர்பில் நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது முற்றுகையிடப்பட்ட வீட்டிலிருந்து சந்தேகநபர் வசமாக சிக்கியுள்ளதுடன், இதன்போது அவரிடமிருந்து துப்பாக்கியொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

ரவைகள் இடப்பட்டு சுடுவதற்கு தயாரான நிலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை தயாரிப்பான துப்பாக்கியும், அதற்குரிய ரவைகளுமே மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்ட வீட்டின் உரிமையாளரான 40 வயது குடும்பஸ்தரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.