ஆமர் வீதி பொலிஸ் நிலைய அதிகாரியின் இரு மகள்களுக்கு கொரோனா

Report Print Rakesh in சமூகம்

கொழும்பு வடக்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆமர் வீதி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரின் இரு மகள்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதையடுத்து குறித்த பொலிஸ் அதிகாரியும் அவருடன் பணிபுரிந்த 16 பொலிஸாரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்த விடயத்தை பொலிஸ் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஆமர் வீதி பொலிஸ் நிலையம் தொற்று நீக்கம் செய்யப்பட்டு வேறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.