பன்னல பிரதேசத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டனர்

Report Print Ajith Ajith in சமூகம்
48Shares

குருநாகல் - பன்னல என்ற இடத்தில் பெண் ஒருவர் கொரோனா தொற்றாளியாக கண்டறியப்பட்டமையை அடுத்து 40 இற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பன்னல பிரதேச பொது சுகாதார அதிகாரி வைத்திய கலாநிதி சாமா ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை அடுத்து பன்னலையின் ஆனந்த ரணவிரு மாவத்தை நேற்று தனிமைப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் திவுலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றுக்கு சென்று வந்தமை தெரியவந்துள்ளது.

இந்தநிலையில் தொற்றாளருடன் நெருங்கியவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கிய பின் ஆனந்த ரணவிரு மாவத்தையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் சாமா ஹேரத் தெரிவித்துள்ளார்.