மேல் மாகாண விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகருக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தின் இரண்டாவது மாடியில் இயங்கும் மேல் மாகாண விசேட விசாரணைப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து அந்த பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் அனைத்து அதிகாரிகளுக்கும் PCR பரிசோதனை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு இடங்களில் கொரோனா வைரஸ் பரவும் நிலை காணப்படுவதால், சுகாதார அதிகாரிகள் வழங்கியுள்ள பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு பொது மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதிகமாக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களுக்கு தேவையின்றி செல்ல வேண்டாம் எனவும் அரசாங்கத்தினால் வலியுறுத்தப்பட்டுள்ளது.