தமது தொழிற்சாலை பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை:ஹைதாரமணி குழுமம்

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனா தொற்றாளர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருந்த தமது தொழிற்சாலையின் பணியாளர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்று ஹைதாரமணி குழுமம் அறிவித்துள்ளது.

குறித்த பணியாளர்கள் தற்போது சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வருவதாக குறித்த குழுமம் தெரிவித்துள்ளது.

கஹதுடுவ சுகாதார அதிகாரியினால் கொரோனா தொற்றாளராக ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிய 250 பணியாளர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது குறித்த பணியாளர்கள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பது கண்டறியப்பட்டதாக ஹைதாரமணி குழுமம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமது குழுமம் தொடர்ந்தும் சுகாதார அதிகாரிகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டு வருவதாகவும் ஹைதாரமணி குழுமம் தெரிவித்துள்ளது.