இலங்கையில் சடுதியாக அதிகரித்த கொரோனா நோயாளிகள்! வெளியான அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் மேலும் 120 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர்.

37 பேர் தனிமைப்படுத்தலில் இருந்தும் 83 பேர் தொற்றாளிகளிகளின் இணைப்பில் இருந்தும் கண்டறியப்பட்டதாக இராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2342 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினம் இதுவரையில் 180 கொரோனா தொற்றாளிகள் பதிவு

இன்றைய தினம் இதுவரையில் 180 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மினுவான்கொடை ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 2342 பேர் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளமை பரிசோதனைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மினுவான்கொடை ஆடைத் தொழிற்சாலையைச் சேர்ந்த 60 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது கிடைக்கப் பெற்ற அறிக்கை முடிவுகளின் பிரகாரம் இன்னும் 120 பேருக்கு நோய்த் தொற்று பரவியுள்ளமை தெரியவந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சாவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி கொரோனா நோய்த் தொற்றுக்கு இலக்கான மொத்த எண்ணிக்கை 5805 என்பது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - கமல்