கொரோனா தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை?

Report Print Kamel Kamel in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுகை தொடர்பில் மிகவும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்யாவிட்டால் எதிர்வரும் நாட்களில் நாடு முழுவதையும் முடக்க வேண்டிய அபாய நிலைமை காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்று பரவுள்ள பகுதிகளை அடையாளம் கண்டு அவற்றை பட்டியலிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் தொற்று நோயியல் பிரிவு இந்த விடயம் தொடர்பில் திருப்திகரமான நடவடிக்கை எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறெனினும், கொவிட்-19 வைரஸ் தொற்று இன்னமும் சமூகத் தொற்றாக உருவாகவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கொழும்பு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளது.