மாபியாவாக உருவெடுத்துள்ள பீ.சீ.ஆர்.பரிசோதனைகள்! ஆய்வக சங்கத்தின் தலைவர் தகவல்

Report Print Rakesh in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றை இனங்காணும் வகையில் இலங்கையில் நடத்தப்படும் பீ.சீ.ஆர். பரிசோதனை முற்றுமுழுதான ஏமாற்று நடவடிக்கையாகும் என இலங்கை ஆய்வக சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

பீ.சீ.ஆர். பரிசோதனை என்பது இன்று மாபியாவாக உருவெடுத்துவிட்டது என்றும், இதற்கு சுகாதார அமைச்சும் உடந்தை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அரசு இன்று கொரோனா வைரஸ் தொற்று சமூகத்தில் பரவிவிட்டது என்பதைக் கூற மறுக்கின்றது. பீ.சி.ஆர். பரிசோதனையை நடத்த ஒரு முறையான சூத்திரம் அரசுக்குக் கிடையாது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.