பல்கலைக்கழக பரீட்சைகள் இணையவழி முறையில்

Report Print Steephen Steephen in சமூகம்

பல்கலைக்கழக பரீட்சைகள் இணையவழி முறையில் நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த் தொற்று பரவுகை நிலைமையின் காரணமாக இவ்வாறு பரீட்சைகள் இணையவழி முறையில் நடாத்தப்பட உள்ளது.

பல்கலைக்கழகங்களின் பரீட்சைகள் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பரீட்சைகளை இணையவழி முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் இணையவழி முறையில் பரீட்சை நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.