கொழும்பில் கொரோனா பரவல்! நிலைமைகளை உன்னிப்பாக அவதானிக்கும் சுகாதார அதிகாரிகள்

Report Print Ajith Ajith in சமூகம்

கொழும்பின், புறக்கோட்டை மற்றும் கோட்டை பகுதியில் கொரோனா பரவலை அடுத்து நிலைமைகளை சுகாதார அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சு தரப்புக்கள் இதனை தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புறக்கோடை நான்காம் குறுக்குத்தெருவில் உள்ள வியாபாரத்தளம் ஒன்றில் இருந்து 4 பேர் கொரோனா தொற்றுடன் கண்டறியப்பட்டனர்.

இதனையடுத்து அவர்கள் தொடர்புகள் கண்டறியப்படுவதாக கொரோனா தடுப்பு தேசிய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கோட்டை பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் தொற்றுக்கு உள்ளானமையை அடுத்து நிலையத்தின் ஏனைய அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் பின்னர் நேற்று மாலை கொழும்பு 1இல் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் மேற்கு புற கோபுரத்தில் ஒரு தொற்றாளி கண்டறியப்பட்டார்.

புறக்கோட்டை மெனிங் சந்தையில் ஒருவர் தொற்றாளியாக கண்டறியப்பட்ட பின்னர் அங்குள்ள 14 வியாபாரத் தளங்கள் கடந்த 16ஆம் திகதியன்று மூடப்பட்டன.

இந்த நிலையில் உரிய நடவடிக்கைகளை தீர்மானிப்பதற்காக சுகாதார அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.