திருகோணமலையில் நபரொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோமரங்கடவல - திறப்பன பகுதியைச் சேர்ந்த வெலிகம ஆராய்ச்சிகே அஜித் வசந்தகுமார டயஸ் (53 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

திருகோணமலை மேல் நீதிமன்றில் வழக்கொன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் இன்றையதினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது.

வழக்கு தொடர்பில் நேற்றைய தினம் சட்டத்தரணி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து குறித்த நபரிடம் பேசும் போது வழக்கிற்கு வருகையில் அதிகளவிலான பணத்தை கொண்டு வருமாறு கேட்டுள்ளார்.

இதனையடுத்து கணவர் வழக்கிற்கு செல்வதற்கு பணம் தேவைப்படுவதாக என்னிடம் தெரியப்படுத்தினார்.

இந்த நிலையில் இன்று காலை வழமைபோன்று தேநீர் ஊற்றிவிட்டு கணவரை பார்த்தபோது கணவர் இருக்கவில்லை.

வெளியே சென்று பார்த்த போது விலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டதை கண்டு பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்தியதாக மனைவி பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சடலத்தை திருகோணமலை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எஸ்.எம்.ரூமி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கட்டளையிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோமரங்கடவல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.