கொட்டாவ மீன் சந்தையில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Report Print Rakesh in சமூகம்

கொழும்பு, கொட்டாவ நகரப் பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனைச் சந்தையில் பணி புரியும் நான்கு ஊழியர்கள் இன்று கொரோனாத் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, மீன் சந்தை மற்றும் அவர்கள் தங்கியிருந்த கட்டடம் என்பன சீல் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனாத் தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சுமார் 40 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பேலியகொடை மீன்சந்தையில் பணியாற்றுவோருக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனையில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் இவ்வாறு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து கம்பஹா மாவட்டம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.