கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது?

Report Print Kamel Kamel in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக்கொள்வது என்பது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் டொக்டர் ஹரித அலுத்கே இது குறித்து ஊடகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கூறுகையில்,

நாம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய வகையிலான செயற்பாடுகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். நாம் அதிகளவில் துரித உணவுகளை எடுத்துக்கொள்வதற்கு பழகிக்கொண்டுள்ளோம்.

எனினும் உள்நாட்டு உணவு வகைகளை அதிகளவில் உட்கொள்வது மிகவும் நன்மையளிக்கக்கூடியதாகும்.குறிப்பாக எமது பாரம்பரிய உணவு வகைகளை உட்கொள்ள முடியும்.

இந்தக் காலத்தில் அதிகளவில் நாம் நீரைப் பருக வேண்டும். குறிப்பாக வெந்நீர் அருந்துவது உசிதமானது. எமது நோய் எதிர்ப்பு சக்திக்கும் முழு உடலின் செயற்பாட்டுக்கும் சுத்தமான நீர் அருந்துவது நன்மை அளிக்கும்.

நீராவி பிடித்தல், சுடு நீர் ஆவியாக்கி அதனை சுவாசிப்பதும் இந்த தருணத்தில் நன்மை அளிக்கக்கூடியதாக அமையும்.

சுவாசப் பை தொடர்பிலான பிரச்சினைகளுக்கு இவ்வாறு ஆவி பிடித்தல் நன்மை அளிக்கக்கூடியது என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது என டொக்டர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.