வவுனியாவில் வாகனங்களுக்கு தட்டுப்பாடு: மூடப்பட்டுள்ள வியாபார நிலையங்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன், பல வியாபார நிலையங்கள் இழுத்து மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொவிட்-19 தாக்கத்தையடுத்து உலக பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளதுடன், நாடுகளுக்கிடையிலான வர்த்தகமும் பாதிப்படைந்துள்ளது.

இதனால் வெளிநாடுகளில் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றின் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விற்பனை நிலையங்கள், கம்பனிகளில் வாகனங்கள் இல்லாமையால் பல விற்பனையகங்களும், கம்பனிகளும் இழுத்து மூடப்பட்டுள்ளதுடன், அதில் தொழில் வாய்ப்பைப் பெற்றிருந்த பல நூற்றுக்கனக்கான இளைஞர், யுவதிகளும் தொழில் வாய்பை இழந்துள்ளனர்.

இயங்குகின்ற சில வாகன விற்பனை நிலையங்கள் பழைய மோட்டார் சைக்கிள் மற்றும் பழைய முச்சக்கர வண்டி என்பவற்றை மீள கொள்வனவு செய்து அதனை விற்பனை செய்தும் வருகின்றன. இதனால் வவுனியாவில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது.