கம்பஹா மாவட்டத்தின் ஏற்றுமதி தொழிற்சாலை பணியாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

Report Print Kamel Kamel in சமூகம்

கம்பஹா மாவட்டத்தின் ஏற்றுமதி தொழிற்சாலைகளைச் சேர்ந்த பணியாளர்கள் ஊரடங்குச் சட்ட காலத்திலும் பணிகளில் ஈடுபட முடியும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் இயங்கி வரும் ஏற்றுமதி கைத்தொழிற்சாலைகளின் நடவடிக்கைகளுக்கு ஊரடங்குச் சட்டம் தடையாக அமையப்பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கைத்தொழிற்சாலைகளைச் சேர்ந்த பணியாளர்கள் தங்களது நிறுவன அடையாள அட்டையை, ஊரடங்குச் சட்ட அனுமதிப்பத்திரமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டம் முழுவதிலும் இன்று இரவு 10.00 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 5.00 மணி வரையில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.