இலங்கையின் தற்போதைய கொரோனா நிலவரம்! வெளியாகியுள்ள அறிவிப்பு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கைக்குள் இன்று மாத்திரம் மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் 166 கொரோனா தொற்றாளிகள் கண்டறியப்பட்டனர்.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் தேசிய நடவடிக்கை நிலையத்தின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை அறிவித்துள்ளார். இதில் இன்று மாலையில் 109 பேர் தொடர்பான தகவல் வெளியிடப்பட்டது.

இதற்குள் பேலியகொட மீன் சந்தையின் 49 பேரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 37பேரும், தொற்றாளிகளின் நெருங்கிய இணைப்புக்களில் இருந்து 23 பேரும் கண்டறியப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் நேற்று இரவு வெளியிடப்பட்ட அறிக்கையில் 57 தொற்றாளிகளின் விபரங்கள் அடங்கியிருந்தன.

இதில் ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்தும் ஏனைய 56 பேர் தொற்றாளிகளின் தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மினுவாக்கொட தொடர்பிலான மொத்த தொற்றாளிகளின் எண்ணிக்கை 2508ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை இலங்கைக்குள் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5978ஆக உயர்ந்துள்ளது.

2464 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் மொத்தமாக 3501 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.