ஊரடங்கு உத்தரவு தடையாக இருக்காது! இராணுவத் தளபதி வெளியிட்ட தகவல்

Report Print Murali Murali in சமூகம்

கம்பஹா மாவட்டத்தில் ஏற்றுமதி தொடர்பான தொழிற்சாலைகளின் செயல்பாட்டிற்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு தடையாக இல்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு காலத்தில், அத்தகைய நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் வேலை செய்யும் இடத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை பயன்படுத்தி வேலை இடத்திற்குச் சென்று வீடு திரும்பலாம்.

இன்று இரவு 10 மணி முதல் கம்பஹா மாவட்டம் முழுவதிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளது.

திங்கட்கிழமை (26ம் திகதி) காலை 5 மணி வரையில் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் வாகனங்கள் நிறுத்தாமல் கம்பாஹா மாவட்டம் வழியாக செல்ல அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கைக்குள் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 5978ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், 2464 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மொத்தமாக 3501 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.