மினுவாங்கொட கொரோனா கொத்தணியில் இருந்து துணைக் கொத்தணிகள் உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கட்டுநாயக்கவில் உள்ள ஒரு தனியார் ஆடைத் தொழிற்சாலையிலிருந்து ஏற்கனவே துணைக் கொத்தணி உருவாகியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
நாளாந்தம் அறிக்கையிடப்படும் ஒவ்வொரு கொரோனா நோயளர்களும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிராண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலை கொத்தணியுடன் தொடர்பிருப்பதாக அவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதிக ஆபத்துள்ள பகுதிகளில் இருந்து கொரோனா தொற்று பதிவாகியிருந்தாலும், வைரஸ் சமூக மட்டத்தில் பரவவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைரஸின் சமூக பரவுதல் சுகாதார மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் பொதுமக்களின் பிரதிபலிப்பைப் பொறுத்தது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தனியார் மற்றும் பல்கலைக்கழக ஆய்வகங்களில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகள் துல்லியமானவை அல்ல என்ற கூற்றையும் அவர் நிராகரித்துள்ளார்.
எவ்வாறாயினும், அவற்றின் தரக் கட்டுப்பாடு அரசு நிறுவனங்களுடன் இணையாக இருப்பதாகவும், அதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் வைத்தியர் சுதத் சமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.