சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள்! வைத்தியர்கள் எச்சரிக்கை

Report Print Vethu Vethu in சமூகம்
706Shares

இலங்கையில் எவருடனும் தொடர்பில்லாத கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான நிலையில் கொரோனா சமூக மயமாகவில்லை என தீர்மானிக்க முடியாதென சங்கத்தின் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைரஸ் தொற்று பரவியமை தொடர்பில் சரியான தகவல்களை தொற்று நோய் விஞ்ஞான பிரிவு வெளியிடுவதாகவும் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மினுவாங்கொட கொரோனா பரவலுடன் தொடர்பில்லாத தொற்றாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு அடையாளம் காணப்பட்டிருந்தால், தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கை போதுமானதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.