மினுவாங்கொட கொரோனா பரவல்! முழுமையாக குணமடைந்த 186 பேர்

Report Print Vethu Vethu in சமூகம்
62Shares

மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை ஊடாக கொரோனா தொற்றுக்குள்ளான 186 பேர் குணமடைந்துள்ளனர்.

முழுமையாக குணமடைந்த 186 பேரும் வீடுகளுக்கு சென்றுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை தொலைக்காட்சி நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராணுவ தளபதி இந்தத் தகவலை வெளியிட்டார்.

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்று ஏற்பட்டமையினால், அது நாடளாவிய ரீதியில் பரவியுள்ளன.

இந்த பரவல் காரணமாக இதுவரை இரண்டாயிரத்து 400 பேர் வரையில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த குழுவிலிருந்து 186 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.